Recent Post

6/recent/ticker-posts

காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves bill for 100% foreign investment in the insurance sector

காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves bill for 100% foreign investment in the insurance sector

இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தலைமுறை நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel