மகாராஷ்டிராவில் நாசிக் – கோலாப்பூர் – அக்கால்கோட் வழித்தடத்தில் 374 கிலோ மீட்டர் தொலைவுக்கு 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.19,142 கோடியாகும். இந்த உள்கட்டுமானம் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட கோட்பாட்டின் கீழ் சாலை போக்குவரத்தில் மிகமுக்கியமான நடவடிக்கையாகும்.
இந்த சாலை அமைக்கப்படுவதன் மூலம் பயண நேரம் 31 மணியிலிருந்து 11 மணியாக குறையும். மேலும், இந்த வழித்தடம் பாதுகாப்பான, விரைவான, தடையற்ற போக்குவரத்து தொடர்பை பயணிகளுக்கும், சரக்கு வாகனங்களுக்கும் வழங்கும்.
இந்த கட்டுமானத்தின் போது நேரடியாக 251.06 லட்சம் மனித நாட்கள் வேலை வாய்ப்பும் மறைமுகமாக 313.83 லட்சம் மனித நாட்கள் வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும்.


0 Comments