பாராமுல்லாவின் செகன்போரா கிராமத்தில் உள்ள சாதாரண மண் மேடுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் ஆய்வின் மூலம், 2,000 ஆண்டுகள் பழமையான ஒரு பௌத்த தளம் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு குஷாணர் காலத்தைச் சேர்ந்த ஸ்தூபிகள், மடாலயக் கட்டிடங்கள் மற்றும் பழங்காலக் கட்டுமானங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டு அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த 3 ஸ்தூபிகளின் பழைய மற்றும் தெளிவற்ற புகைப்படங்கள் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
அந்தப் புகைப்படங்களே தற்போது செகன்போராவில் ஒரு மாபெரும் பௌத்த நாகரிகம் புதைந்து கிடப்பதைக் கண்டறிய முக்கியக் காரணமாக அமைந்தன.
செகன்போரா பகுதி, குஷாணர்களின் தலைநகராகக் கருதப்படும் 'ஹுவிஷ்கபுரா' உடன் தொடர்புடைய ஒரு முக்கியமான பௌத்த சமய மையமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


0 Comments