இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.2% உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டை விடவும், முந்தைய காலாண்டையும் விடவும் மிக அதிகம் ஆகும். அமெரிக்காவின் வரிகள் போன்ற சவால்களையும் தாண்டி இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட இந்த புள்ளிவிவரங்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவைகள் துறைகளின் வலுவான பங்களிப்பை காட்டுகின்றன.
மேற்கூறிய காலகட்டத்தில் நிலையான விலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 48.63 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 44.94 லட்சம் கோடியாக இருந்தது.
பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7% உயர்ந்து ரூ. 85.25 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.


0 Comments