Recent Post

6/recent/ticker-posts

2025-26ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி / India's Gross Domestic Product in the Second Quarter of the 2025-26 Financial Year

2025-26ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி / India's Gross Domestic Product in the Second Quarter of the 2025-26 Financial Year

2025-26ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த விகிதம் முதல் காலாண்டில் இருந்த 7.8 சதவீதம் மற்றும் 2024-25ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இருந்த 7.4 சதவீதம் என்பதைக் காட்டிலும் அதிகமாகும்.

நவம்பர் 2025ம் ஆண்டில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் 2025ல் இருந்த 5.2 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைந்தது. இது ஏப்ரல் 2025க்குப் (5.1%) பிறகு மிகக் குறைந்த விகிதமாகும்.

நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்க விகிதம் ஜனவரி 2025ம் ஆண்டில் இருந்த 4.26 சதவீதத்திலிருந்து நவம்பர் 2025ல் படிப்படியாகக் குறைந்து 0.71 சதவீதமாக இருந்தது.

ஜனவரி 2025-ல் 36.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2025-ல் 38.13 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.

4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது.

மேலும், 2030-ம் ஆண்டில், 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற மதிப்பீட்டுடன், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் நிலையில் உள்ளது.

இந்த வளர்ச்சியின் வேகம், 25-26ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பணவீக்க விகிதம் குறைவான அளவில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து வருகிறது. ஏற்றுமதி செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மேலும், வர்த்தகத் துறைக்கு வலுவான கடன் உதவிகளுடன் நிதிபரிவர்த்தனைகள் சாதகமாக நீடிக்கின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel