தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.நா.வால் சுற்றுச் சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்" விருதினை பெற்றுள்ளார்.
இயற்கை பாதுகாப்பில் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக, சுப்ரியா சாகுவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களைக் கொண்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை UNEP-யின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் கௌரவிக்கிறது.
இந்த விருது ஐ.நா.வின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவமாகும். கடந்த 2005ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு துணை நிற்கும் 127 பேருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


0 Comments