Recent Post

6/recent/ticker-posts

புதுதில்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு 2025ஐ மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Minister Shri Amit Shah inaugurated the Counter-Terrorism Conference 2025 in New Delhi

புதுதில்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு 2025ஐ மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார் / Union Minister Shri Amit Shah inaugurated the Counter-Terrorism Conference 2025 in New Delhi

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் 'பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு-2025'-ஐ தொடங்கி வைத்தார். இரண்டு நாள் மாநாட்டை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏற்பாடு செய்துள்ளது.

NIA-ன் புதுப்பிக்கப்பட்ட குற்றக் கையேடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் மற்றும் தொலைந்து போன/கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட ஆயுத தரவுத்தளம் ஆகியவற்றையும் அமைச்சர் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை இணையமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய் மற்றும் திரு பண்டி சஞ்சய் குமார், மத்திய உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மத்திய நிறுவனங்கள்/துறைகளின் அதிகாரிகள், தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel