கத்தார் தலைநகர் தோஹோவில் சர்வதேச சதுரங்க சம்மேளனத்தின் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதன் கடைசி நாளில் கடினமான BLITZ போட்டி நடைபெற்றது.
வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் நேடிர்பெக்கை 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் நார்வே சதுரங்க நட்சத்திரம் கார்ல்சன் வீழ்த்தினார். இதில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசி வெண்கலம் வென்றார்.
மகளிர் பிரிவு பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை Bibisara Assaubayeva வென்றார். முன்னதாக நடைபெற்ற ரேபிட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இதிலும் இந்திய வீரர் அர்ஜூன் எரிகேசிக்கு 3ஆவது இடமே கிடைத்தது. மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி கொனேரு வெண்கலம் வென்றார்.
இந்த போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் 20ஆவது முறையாக கார்ல்சன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார். அவருக்கு 74 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.


0 Comments