ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைப்பதோடு, அவற்றை பலப்படுத்தவும், விரிவுபடுத்தவுமான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.1,526.21 கோடியாகும். இதில் கட்டுமான செலவு ரூ.966.79 கோடியும் அடங்கும். தேசிய நெடுஞ்சாலை எண்.326-ஐ மேம்படுத்துவது இந்த வழித்தடத்தில் விரைவான, பாதுகாப்பான, மிகவும் நம்பகமான பயணத்தை உறுதி செய்யும். மேலும் தெற்கு ஒடிசா பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படும்.


0 Comments