Recent Post

6/recent/ticker-posts

இந்திய மற்றும் ஜோர்டான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் / Free trade agreement between India and Jordan

இந்திய மற்றும் ஜோர்டான் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் / Free trade agreement between India and Jordan

ஜோர்டான் நாட்டின் மன்னர் இரண்டாவது அப்துல்லாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள்அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஜோர்டான் சென்றார்.

நேற்று பிரதமர் மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லாவும் தலைநகர் அம்மானில் நடந்த இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்கள்.

பட்டத்து இளவரசர் ஹூசைன் மற்றும் ஜோர்டானின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், முதலீட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மன்னர் இரண்டாவது அப்துல்லா, ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும், இந்தியாவின் பொருளாதார வலிமையையும் இணைத்து தெற்காசியா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் ஒருபொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,\\" உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் , வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஜோர்டானுடனான இருதரப்பு வர்த்தகத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்கப்படும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், பின்டெக், ஹெல்த் -டெக் மற்றும் அக்ரி டெக் ஆகிய துறைகளில் இந்தியா-ஜோர்டான் ஒன்றிணைந்து செயல்பட இரு நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்\\" என்றார்.

பிரதமர் மோடியை ஜோர்டான் பட்டத்து இளவரசர் இரண்டாவது அல் உசைன் பின் அப்துல்லா தனது காரில் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்சென்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel