Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து / A free trade agreement was signed between India and Oman in the presence of Prime Minister Modi

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து / A free trade agreement was signed between India and Oman in the presence of Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், ஓமனின் வரி விதிப்பு பிரிவுகளில் 98.08% பொருட்களுக்கு சுங்க வரி விலக்கை அளிக்கிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 99.38% ஆகும்.

ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் பொருட்கள், பிளாஸ்டிக், விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகள் முழுமையான சுங்கவரி விலக்கால் பயனடையும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel