இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பலை (Hydrogen Fuel Cell Vessel) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால், இந்த கப்பலின் வணிகச் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தூய்மையான மற்றும் நிலையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments