இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.2% ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்த ஜிடிபி கணக்கீட்டை சி கிரேடு அறிக்கை என்று தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் புள்ளிவிவரங்களின் தரம் இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்தியாவின் தேசியக் கணக்கு விவரங்களின் தரத்திற்கு 'சி' கிரேடு (இரண்டாவது மிகக் குறைந்த மதிப்பீடு) அடிப்படையில் உள்ளது.


0 Comments