Recent Post

6/recent/ticker-posts

பணவீக்க அடிப்படையிலான வருடாந்திர மொத்த விற்பனை விலை குறையீட்டு எண் / Inflation-based Annual Wholesale Price Index

பணவீக்க அடிப்படையிலான வருடாந்திர மொத்த விற்பனை விலை குறையீட்டு எண் / Inflation-based Annual Wholesale Price Index

பணவீக்க அடிப்படையிலான வருடாந்திர மொத்த விற்பனை விலை குறையீட்டு எண் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் (நவம்பர் 2025) 2011 - 2012-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள இந்த குறியீடு, பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோக உற்பத்தி மற்றும் மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதை இந்த மொத்த விற்பனை விலை குறியீடு அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் முதன்மையான பொருட்களின் மொத்த விற்பனை விலை குறியீடு மற்றும் வருடாந்திர பணவீக்க விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.

இதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் குறியீடுகளும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளதை காண முடிகிறது. இருந்தபோதிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டு எண் சற்று குறைந்துள்ளது.

எனினும் உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முந்தைய மாதத்துடன் (அக்டோபர் 2025) ஒப்பிடுகையில் 0.71 சதவீதம் கூடுதலாகும்.

வருடாந்திர பணவீக்க விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த ஏற்றத்தாழ்வு காரணமாக மொத்த விற்பனை விலை குறியீடு அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel