ஒடிசா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ ஆய்வகங்கள் இணைந்து உள்நாட்டிலேயே 'பினாகா' ரக ஏவுகணைகளைத் தயாரித்து வருகின்றன.
ஏற்கனவே 40 கி.மீ. மற்றும் 75 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், 120 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் நீண்ட தூர 'பினாகா' ரக ஏவுகணை புதிதாக வடிவமைக்கப்பட்டது.
இந்த புதிய ஏவுகணையைச் செலுத்துவதற்குப் புதிய வாகனங்கள் எதுவும் தேவையில்லை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லாஞ்சர்கள் மூலமே இதனை இயக்க முடியும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தில், நேற்று (29ம் தேதி) இந்த ஏவுகணை முதன்முறையாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது.
சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட 120 கி.மீ. தூரத்திலுள்ள இலக்கை இந்த ராக்கெட் 'மிகத் துல்லியமாக' தாக்கி அழித்துச் சாதனை படைத்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்ற அதே நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராணுவத்திற்கு இந்த ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ய முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது.


0 Comments