Recent Post

6/recent/ticker-posts

இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார் / President released the Indian Constitution in the Santali language

இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் வெளியிட்டார் / President released the Indian Constitution in the Santali language
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (டிசம்பர் 25, 2025) வெளியிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2003 -ம் ஆண்டின் 92 - வது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சந்தாலி மொழி, இந்தியாவின் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகும்.

ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடியின மக்களால் இம்மொழி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel