பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக எத்தியோப்பியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.தலைநகர் அடிஸ் அபாபா சென்ற அவருக்கு, அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' (The Great Honor Nishan of Ethiopia) என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்குக் கிடைக்கப்பெற்ற 28வது உயரிய விருது இதுவாகும். பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.


0 Comments