இந்திய உருமாற்றத்திற்காக அணுசக்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பயன்படுத்தும் நோக்கில் 'ஷாந்தி' மசோதா நாடாளுமன்ற மேலவையில் இன்று நிறைவேறியது.
இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெற்றது. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் விவாதங்களுக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அவர் ஒப்புதல் வழங்கினால், 1962 அணுசக்தி சட்டம் மற்றும் 2010 குடிமக்கள் பொறுப்பு சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும்.
அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கும் வழி திறக்கும் இந்த மசோதா, 80 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.


0 Comments