Recent Post

6/recent/ticker-posts

கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா சபை தீர்மானம் நிறைவேறியது / UN resolution demanding Israel's withdrawal from the Golan Heights passed

கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா சபை தீர்மானம் நிறைவேறியது / UN resolution demanding Israel's withdrawal from the Golan Heights passed

கடந்த 1976ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 6 நாள் போர் நடைபெற்றது. இஸ்ரேல் ஒருபுறமும், எகிப்து, சிரியா, ஜோர்டன் மற்றும் ஈராக் அடங்கிய அரபு நாடுகள் மறுபுறமும் இடையே நடைபெற்ற இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.

அப்போது, ஜோர்டானிடம் இருந்து கிழக்கு ஜெருசலேம், சிரியாவில் இருந்து கோலன் ஹைட்ஸ், எகிப்திடம் இருந்து சினாய் தீபகற்பம் மற்றும் காசா பகுதி, மேற்குக் கரை உள்ளிட்டவைகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

இந்த போரின் விளைவாக மத்திய கிழக்கின் அரசியல் வரைப்படம் முற்றிலும் மாறியது. மேலும், இதன் விளைவு இன்றும் இப்பகுதியின் பதட்டங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

இந்த நிலையில், கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா சபையில் இன்று (03-12-25) நிறைவேறியது. இன்று நடைபெற்ற ஐ.நா சபைக் கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து நாடு தீர்மானம் ஒன்று கொண்டு வந்தது.

அந்த தீர்மானத்தில், சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பது சட்டவிரோதம். எனவே அப்பகுதியை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, தீர்மானம் தொடர்பாக விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன, 43 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

வாக்கெடுப்பு முடிவில், எகிப்து கொண்டு வந்த தீர்மானத்துக்கு பெரும்பான்மை இருந்ததால் இந்த தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேறியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel