தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். புதிய உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் மதுரை தொண்டி சாலையில் அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது.


0 Comments