Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவின் ராம்சர் பட்டியலில் 2 புதிய ஈரநிலங்கள் சேர்ப்பு / Two new wetlands added to India's Ramsar list

இந்தியாவின் ராம்சர் பட்டியலில் 2 புதிய ஈரநிலங்கள் சேர்ப்பு / Two new wetlands added to India's Ramsar list

2014ம் ஆண்டில் 26 தளங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, தற்போது 98 தளங்களாக, 276 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டா மாவட்டத்தில் உள்ள பாட்னா பறவைகள் சரணாலயம் மற்றும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள சாரி-தாண்ட் ஆகியவை ராம்சர் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு ஈரநிலங்களும் நூற்றுக்கணக்கான வலசை போகும் மற்றும் உள்ளூர் பறவை இனங்களுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளன. இந்த பகுதிகள், அழிந்து வரும் பறவைகளைத் தவிர, சிங்காரா, ஓநாய்கள், காரக்கால், பாலைவனப் பூனைகள் மற்றும் பாலைவன நரிகள் போன்ற வனவிலங்குகளுக்கும் புகலிடமாக உள்ளன.

ஈரானின் ராம்சர் நகரில், கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஈரநிலங்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், இது குறித்த உடன்படிக்கை ஒன்றில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1982ம் ஆண்டு பிப்ரவரி 1 - ம் தேதி இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel