மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் சமீபத்தில் பராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள துணை முதல்வர் பதவிக்கு அவரது மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான (MP) சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார்.
62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வராகிறார்.
பாராமதி பகுதியை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவாக மாற்றியதில் சுனேத்ராவுக்கு பங்கு உண்டு. சுனேத்ரா பவார் துணை முதல்வராக ஆவதால், அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.


0 Comments