Recent Post

6/recent/ticker-posts

ஏஐ உச்சி மாநாடு 2026 / AI Summit 2026

ஏஐ உச்சி மாநாடு 2026 / AI Summit 2026

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு இன்று (பிப். 16) தொடங்கியது. தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இதற்கு முன்பு பிரிட்டன், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. இம்முறை தெற்குலகில் முதல்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனித மூலதனம், அறிவியல், ஏஐ வளங்களை ஜனநாயகமாக்கல், மீள்தன்மை புத்தாக்கம் மற்றும் ஆற்றல், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அதிகாரமளித்தல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகநலனுக்கான ஏஐ ஆகிய 7 கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel