திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு 90 வயதில் கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியானம் தொடர்பான பேசும் புத்தகத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த பேசும் புத்தகம் தியானத்தின் முக்கியத்துவத்தை எளிய வார்த்தைகளில் விளக்குகிறது. மன அமைதி மற்றும் உள்ளார்ந்த சாந்தி பற்றி இதில் பேசப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இந்த புத்தகம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆன்மிக இலக்கியத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. தலாய் லாமாவின் குரல் தான் இதன் தனிச்சிறப்பு. இந்த கிராமி விருதை தலாய் லாமா சார்பில் இசையமைப்பாளர் ருபுஸ் பெற்றுக் கொண்டார்.


0 Comments