Recent Post

6/recent/ticker-posts

ஜனவரி 2026 மாத ஜி.எஸ்.டி வசூல் / GST collection for the month of January 2026

ஜனவரி 2026 மாத ஜி.எஸ்.டி வசூல் / GST collection for the month of January 2026

நாட்டின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல், கடந்த ஜனவரி மாதத்தில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது.

மொத்த வருவாய் ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.1,82,094 கோடியாக இருந்த வசூல், இந்த ஆண்டு 6.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,93,384 கோடியாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து மட்டுமே ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், இறக்குமதி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வசூல் 10.1 சதவீதம் உயர்ந்து ரூ.52,253 கோடியாக இருந்தது. இதனால் வெளிநாட்டு வர்த்தகத்திலும் வளர்ச்சி தென்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருப்பி வழங்கப்பட்ட தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது. இந்த ரிஃபண்டுகளை கழித்தபின், ஜனவரி மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், புகையிலைப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட செஸ் வரி மட்டும் ரூ.5,768 கோடியாக பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel