Recent Post

6/recent/ticker-posts

மகாராஷ்ட்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 3 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 3 railway projects in Maharashtra, Madhya Pradesh, Bihar and Jharkhand

மகாராஷ்ட்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 3 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 3 railway projects in Maharashtra, Madhya Pradesh, Bihar and Jharkhand

ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் ரூபாய் 9,072 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கோன்டியா – ஜபல்பூர் இரட்டை வழிப்பாதை, புனாரக் – கியூல் இடையே 3வது, 4வது வழித்தடம், கம்ஹாரியா – சந்தில் இடையே 3வது, 4வது வழித்தடம் ஆகியவை இதில் அடங்கும். 

மகாராஷ்ட்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 8 மாவட்டங்களில் இந்த 3 திட்டங்கள் அடங்கும். இதன் மூலம் சுமார் 307 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் வழித்தடம் அதிகரிக்கும்.

இதனால் சுமார் 98 லட்சம் மக்கள் வசிக்கும் 5407 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி மேம்படும். அத்துடன் கச்னார் சிவாலயம் (ஜபல்பூர், கன்ஹா தேசிய பூங்கா (பாலாகட்), கங்குல்பாரா அணை மற்றும நீர்வீழ்ச்சி, பென்ச் தேசிய பூங்கா, துவாந்தர் நீர்வீழ்ச்சி, பார்கி அணை, கோம்ஜி – சோம்ஜி கோவில், சந்தில் அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதியையும் இத்திட்டங்கள் மேம்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel