முன்னணி கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி (L&T) மற்றும் உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (NVIDIA) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்ட 'ஏஐ ஃபேக்டரி' (AI Factory) எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
டெல்லியில் நடைபெற்று வரும் ஏ.ஐ. மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 'எல் அண்ட் டி கிளவுட்பினிட்டி' (L&T Cloudfiniti) தரவு மையத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன என்விடியா ஜிபியு (NVIDIA GPU) கட்டமைப்புகள் நிறுவப்பட்டு, இதன் திறன் 30 மெகாவாட் வரை உயர்த்தப்பட உள்ளது.
'NVIDIA GPUs' என்பவை கணினியின் முக்கியமான பாகமாகும். இது ஒரு நொடியில் பல கோடி கணக்குகளைச் செய்து, ஏஐ (AI) மென்பொருள்களை மின்னல் வேகத்தில் இயங்க வைக்கும்.
300 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த ஏஐ மையம் இந்தியாவின் முக்கியமான தரவுகள் (Data) மற்றும் தகவல்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.
சென்னை போன்று மும்பையிலும் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க எல் அண்ட் டி மற்றும் என்விடியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments