டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனம் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் வாகன உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அரசு இது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு துரிதமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உலகப் புகழ் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ள இவ்வாலையின் முதலாவது வாகனம் இன்று வெளியிடப்பட்டது.


0 Comments