சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நியமனம் / Appointment of S.A. Dharmadhikari as the Chief Justice of the Madras High Court

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கூடியிருந்த நிலையில், அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய சட்டத்துறை மற்றும் குடியசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று தெரியவருகிறது.

இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் வஸ்தவா வரும் மார்ச் 5ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். எனவே மார்ச் 6ம் தேதி முதல் தர்மாதிகாரி பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது.

இதேப்போன்று அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முகமது நதீம் செராஜ் உட்பட ஒன்பது வழக்கறிஞர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.