தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 56 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இம்மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தில், பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பு, சங்ககாலச் சோழர்கள், சமயங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, நிருவாகமும் ஆட்சிமுறையும், கட்டடக்கலைச் சிறப்பு, நகரமைப்பு, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு (சோழர் கால செப்புப் படிமங்கள் மற்றும் கற்சிற்பங்கள்), சமூக வாழ்வு, பொருளாதாரம், இலக்கியம், கடல்கடந்த வாணிபம், வெளிநாட்டுப் படையெடுப்புகள், கடற்படை வலிமை மற்றும் இராணுவத் திறன் ஆகிய தலைப்புகளில் தனித்தனி காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.


0 Comments