Recent Post

6/recent/ticker-posts

என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister Stalin launched the 'My Dream My Future' scheme

என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / Chief Minister Stalin launched the 'My Dream My Future' scheme

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. 

மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் நலத்திட்டங்கள், பயன்கள் வழங்கும் விழா, 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழா, ‘என் கனவு என் எதிர்காலம்‘ இணையதளத் தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (பிப். 4) நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாறிலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நலத் திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கி, ‘என் கனவு என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel