KLA கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான KLA இந்தியா நிறுவனம், 3,600 கோடி ரூபாய் முதலீட்டு பொறுப்புறுதியுடன் சென்னையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க வளாகத்தை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
12 ஏக்கர் நிலப்பரப்பளவிலான இந்த வளாகத்தில், உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில், சுமார் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments