வானில் பறக்கும் விமானம், ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்க பாராசூட் பயன்படுத்துவது போல, விமானம் உள்ளிட்டவை தரையிறங்கும்போது, அதன் வேகத்தை மட்டுப்படுத்த டிரோக் பாராசூட் பயன்படுத்தப்படும்.
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்துக்கு இதுபோன்ற பாராசூட் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த பாராசூட்டை புதன்கிழமை சண்டீகரில் உள்ள சோதனை மையத்தில் டிஆா்டிஓ பரிசோதித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ககன்யான் திட்டத்துக்காக டிரோக் பாராசூட் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பது, விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தில் முக்கிய மைல்கல் ஆகும்.
அதிக சக்தி கொண்ட ரிப்பன் பாராசூட்டுகளை வடிவமைப்பது, உற்பத்தி செய்வதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பதை இந்த பரிசோதனை நிரூபித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments