Recent Post

6/recent/ticker-posts

எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between ELCAT and HCL Tech

எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU between ElCAT and HCL Tech

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 1,536 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில், 10 இலட்சத்து 93 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து, 50 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்கா, மதுரை மாநகராட்சி, கரிமேட்டில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கூரான் நவீன அறிவியல் மையம், 1 கோடியே 67இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள HP கணினி திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வடபழஞ்சி எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பினாகிள் இன்ஃபோடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, பணியாளர்களுக்கான குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், 150 கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel