Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் / Trump approves trade agreement with India

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் / Trump approves trade agreement with India

பிரதமா் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்த நிலையில், வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தாா்.

மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தாா். அவருடன் வா்த்தகம், ரஷியா-உக்ரைன் போருக்கான தீா்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். 

அப்போது ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிகள அவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டாா்.

பிரதமா் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவா் கேட்டுக் கொண்டதன்பேரிலும் அமெரிக்கா-இந்தியா வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டேன். இதனால் இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வரும் என எதிா்பாா்க்கிறேன்.

ஏற்கெனவே, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயா்த்த இந்தியா முடிவுசெய்துள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் இறக்குமதியை மேலும் அதிகப்படுத்த பிரதமா் மோடி ஒப்புக்கொண்டாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel