Recent Post

6/recent/ticker-posts

மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் பதவியேற்பு / Yumnam Khemchand takes oath as Chief Minister of Manipur

மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் பதவியேற்பு / Yumnam Khemchand takes oath as Chief Minister of Manipur

மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் யும்நம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கூட்டணி அரசில் சமூக சமநிலையைப் பேணும் விதமாக, குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.

இதில் நெம்சா கிப்ஜென், டெல்லியில் உள்ள மணிப்பூர் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பதவியேற்றுக் கொண்டார். மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel