Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் - புனல் (1916)-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் / Chief Minister M.K. Stalin inaugurated the Tamil Nadu Integrated Drinking Water Redressal Centre - Funel (1916)

தமிழ்நாட்டில் பொது மக்களை மையமாகக் கொண்ட நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையத்தை - புனல் (1916)' இன்று (4.03.2026) முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம், குடிநீர் தொடர்பான அனைத்து புகார்களையும் பதிவு செய்வதற்கான பொதுவான தளத்தை பொது மக்களுக்கு வழங்குகிறது. 

24 மணி நேரமும் இயக்கப்படும் இத்தளம், குடிநீர் கிடைக்கும் தன்மை, நீரின் தரம் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பான ஒவ்வொரு புகாரும் விரைந்து கேட்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் 24 மணி நேரமும் தீர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel