நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன்' திட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கிராமப்புறப் பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் சிரமத்தைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டத்திற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக அதிகரித்து, மொத்த நிதியை ரூ.8.7 லட்சம் கோடியாக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்கள் குழாய் இணைப்பு பெற ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு வீட்டிற்குத் தேவையான இணைப்புச் செலவான ரூ.30,000 முதல் ரூ.60,000 வரையிலான முழுத் தொகையையும் அரசே ஏற்கிறது.
1.25 கோடி வீடுகளுக்குக் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.11 கோடிக்கும் அதிகமான (89.10%) வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தலா 55 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாதந்தோறும் வெறும் 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குழாய் குடிநீர் வசதி இல்லாத கிராமப்புற குடும்பங்கள், குறிப்பாகத் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தகுதியான வீடுகளை அடையாளம் கண்டு வருகின்றன.
%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20Union%20Cabinet%20approves%20extension%20of%20Jal%20Jeevan%20scheme%20for%20two%20more%20years%20(till%202028).jpg)

0 Comments