Recent Post

6/recent/ticker-posts

மதுரையில் பிரதமர் மோடி ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் / PM Modi inaugurates projects worth ₹4,400 crore in Madurai

மதுரையில் பிரதமர் மோடி ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் / PM Modi inaugurates projects worth ₹4,400 crore in Madurai

பிரதமர் மோடி மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையேயான 4 வழிச்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட காரைக்குடி, மொரப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 முக்கிய ரயில் நிலையங்களைப் பிரதமர் திறந்து வைத்தார். 

தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களான கும்பகோணம், வேலூர், ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய 'ஆகாஷ்வாணி' பண்பலை சேவைகளைத் தொடங்கி வைத்தார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அரசு விழாவை முடித்துக்கொண்ட பிரதமர், அடுத்ததாகத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel