ராணுவத்துக்குத் தேவையான ஏவுகணைகள், துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது குறுகிய தூர எதிரி இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
'விஷார்ட்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த வகை ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையை மனிதர்கள் எளிதாக சுமந்து செல்ல முடியும்.
இதை டிஆர்டிஓ.வின் இம்ராத் ஆய்வு மையம், மற்ற டிஆர்டிஓ ஆய்வு மையங்கள், இந்திய தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.


0 Comments