Recent Post

6/recent/ticker-posts

திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார் / Forest Minister Rajakannappan inaugurates India's first Dewangu sanctuary in Dindigul

திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  திறந்து வைத்தார்  / Forest Minister Rajakannappan inaugurates India's first Dewangu sanctuary in Dindigul

'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு.தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.

இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும்.

தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel