நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் தொகுப்பின் (Hydrogen Trainset) 'ஆஸிலேஷன்' (Oscillation) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் (Jind) மற்றும் சோனிபட் (Sonipat) இடையே இயக்கப்பட உள்ளது. சென்னையின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) இந்த அதிநவீன ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் ரயில் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஹைட்ரஜன் ரயில்கள் வணிக ரீதியான சேவைக்கு வரும்போது, ஜெர்மனி, ஸ்வீடன், ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் உலகின் ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணையும்.
இந்தச் சோதனையானது ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO) மூலம் மதிப்பீட்டு செயல்முறையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.


0 Comments