கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மறுசீரமைப்பு செல்கள் மற்றும் சென்சார்களுக்கான வசதியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார் / Union Minister of State Dr Jitendra Singh inaugurated the facility for regenerative cells and sensors in Thiruvananthapuram, Kerala

மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (01.03.2026) திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தில் புதிய அதிநவீன "மறுசீரமைப்பு செல்கள் மற்றும் சென்சார்களுக்கான மத்திய வசதியை" திறந்து வைத்தார்.

புதிய மறுசீரமைப்பு செல் வசதி, மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவம், வேளாண் மரபியல் துறை ஆகியவற்றை மேம்படுத்தும்.

இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் உயிரி பொருளாதாரம் கிட்டத்தட்ட பதினாறு மடங்கு விரிவடைந்துள்ளது எனவும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து கிட்டத்தட்ட 166 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் ஆண்டுகளில் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் இலக்குடன் இந்தியா உள்ளது என்று அமைச்சர் கூறினார். 2014-ம் ஆண்டில் சுமார் 70 ஆக இருந்த உயிரி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இப்போநு 11,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.