நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை வலுப்படுத்தும் திசையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், தீன்தயாள் துறைமுக ஆணையத்தின் LC-235 பகுதியில் ஒரு 'சாலை மேம்பாலம்' (ROB) அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தின் மதிப்பீடு ₹132.51 கோடியாகும்.
இத்திட்டமானது, இந்திய அரசின் முதன்மைத் திட்டமான 'சாகர்மாலா திட்டத்தின்' ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகத் திகழ்வதுடன், நாடு முழுவதும் பல்வகை போக்குவரத்து இணைப்பையும் தளவாடச் செயல்திறனையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'பிரதமரின் கதி சக்தி தேசியத் திட்டத்தின்' நோக்கங்களுடனும் ஒத்துப்போகிறது.
இக்கட்டுமானப் பணிகள் தற்போது மேற்கு ரயில்வேயால் 'வைப்புத்தொகை அடிப்படையில்' (deposit basis) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


0 Comments