பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள லோஹித் ஆற்றின் குறுக்கே 'கலை-II' நீர்மின் திட்டத்தை (HEP) அமைப்பதற்காக ரூ. 14,105.83 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான உத்தேச கால அளவு 78 மாதங்களாகும்.
1200 மெகாவாட் (6 x 190 மெகாவாட் மற்றும் 1 x 60 மெகாவாட்) நிறுவப்பட்ட திறன் கொண்ட இத்திட்டம், ஆண்டுதோறும் 4852.95 MU (மில்லியன் யூனிட்) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோஹித் ஆற்றுப் படுகையில் அமையும் முதல் நீர்மின் திட்டமான இது, அம்மாநிலத்தின் மின் விநியோகத்தை வலுப்படுத்துவதுடன், உச்ச நேர மின் தேவை மேலாண்மைக்குத் துணை நிற்கும். மேலும் தேசிய மின் தொகுப்பைச் சமநிலைப்படுத்துவதிலும் முக்கியப் பங்களிப்பை வழங்கும்.


0 Comments