2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி அளித்த புள்ளி விபரங்களின் படி 16% பொருளாதார வளர்ச்சியுடன் தொழில் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை , கோவை ,தூத்துக்குடி, மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தியதன் மூலம் தற்போதைய அரசு ரூபாய் 160.53 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6 சதவீதம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகளில் ரூபாய் 9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி செய்து இந்திய அளவில் தமிழ்நாடு தொழில்துறை உற்பத்தியில் இந்திய அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளதாகவும் , சுமார் 16% வளர்ச்சியுடன், இந்தியாவின் மிக வேகமாக வளரும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

0 Comments