Recent Post

6/recent/ticker-posts

தொடர்ந்து 2-வது நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி / Tamil Nadu Achieves Double-Digit Economic Growth for the Second Consecutive Financial Year

தொடர்ந்து 2-வது நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி / Tamil Nadu Achieves Double-Digit Economic Growth for the Second Consecutive Financial Year

2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை.

இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 2011-2012 ஆம் ஆண்டின் 7.4 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் 2021-22 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 9.07 சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கிறது.
முந்தைய ஐந்தாண்டு (2016-17 முதல் 2020-21 வரை) சராசரியான 5.21 சதவிகிதம் வளர்ச்சியைவிட 3.86 சதவிகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.

தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 4.08 லட்சமாக உள்ளது. முதலிடத்தில் ரூ. 4.33 லட்சத்துடன் கர்நாடகம் முதலிடத்தில் இருக்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel