Recent Post

6/recent/ticker-posts

மார்ச் 2026 மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு விருது / ICC Player of the Month Award for March 2026

மார்ச் 2026 மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு விருது  / ICC Player of the Month Award for March 2026

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அதன்படி, மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மேற்கின்ஷிய தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை அரையிறுதியில் விளையாடச் செய்தார்.

தொடர்ந்து, வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் குவித்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்கள் குவித்து இந்தியா அபாரமான வெற்றியைப் பெற சஞ்சு சாம்சன் உதவினார். அவர் அதிரடியாக விளையாடிய 3 முக்கியப் போட்டிகளில் 275 ரன்களுடன் அந்தத் தொடரின் சிறந்த வீரருக்கான பட்டத்தையும் பெற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel