Recent Post

6/recent/ticker-posts

மார்ச் மாத 2026 ஜிஎஸ்டி வசூல் / March 2026 GST Collections

மார்ச் மாத 2026 ஜிஎஸ்டி வசூல் / March 2026 GST Collections

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டு மார்ச் மாதம் வசூல் ஆன தொகையை விட 9 சதவீதம் அதிகம் ஆகும்.

2025 - 26 நிதியாண்டில் வசூல் ஆன அதிகபட்ச 3வது ஜிஎஸ்டி வருமானம் இதுவாகும். ஏப்ரல் மாதம் ரூ.2.36 லட்சம் கோடியும், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடியும் வசூல் ஆகி இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.83 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது.

இந்த நிதியாண்டு மட்டும் ரூ.22.27 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. உள்நாட்டு மொத்த வருமானம் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 17.8 சதவீதம் அதிகரித்து ரூ.53,861 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டியில் மத்திய அரசு சீர்திருத்தம் செய்தது. 375 பொருட்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. 4 அடுக்காக இருந்தது 2 ஆக குறைக்கப்பட்டது. புகையிலை மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.

இதற்கு பிறகு முதல் மாதம் ஜிஎஸ்டி குறைந்தது. பிறகு நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடியும்டிசம்பரில் ரூ.1.74 லட்சம் கோடியும்இந்தாண்டு ஜனவரியில் ரூ. 1.93 லட்சம் கோடி என அதிகரித்தது.

கடந்த பிப்., மாதம் ரூ.1.83 லட்சம் கோடியாக குறைந்த நிலையில் மார்ச் மாத வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel