கிரிக்கெட் உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் விஸ்டன் விருதுகளில் இந்திய வீரர்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய முத்திரை பதித்துள்ளனர்.
சுப்மன் கில் முதல் தீப்தி ஷர்மா வரை இந்திய நட்சத்திரங்கள் உலக அளவில் சிறந்த வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அபாரமாகச் செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் சிறந்த 5 வீரர்களில் 4 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஹசீப் ஹமீது (இங்கிலாந்து) கவுண்டி கிரிக்கெட்டில் 1,258 ரன்கள் குவித்ததற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகின் சிறந்த வீரர்கள் (Leading Cricketers in the World) - ஆண்கள் பிரிவு: ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆஷஸ் தொடரில் அவரது அபாரப் பங்களிப்பிற்காக உலகின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகின் சிறந்த வீரர்கள் (Leading Cricketers in the World) - பெண்கள் பிரிவு: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா, மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்ததற்காக (22 விக்கெட்டுகள் & 215 ரன்கள்) உலகின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் ஷர்மா 2025-ஆம் ஆண்டில் 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 1,602 ரன்கள் குவித்து மிரட்டியதற்காக, உலகின் சிறந்த டி20 வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஸ்டன் கோப்பை (Wisden Trophy) - எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 430 ரன்கள் (269 & 161) விளாசிய சுப்மன் கில்லுக்கு, 'ஆண்டின் சிறந்த தனிநபர் ஆட்டத்திற்கான' விஸ்டன் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.


0 Comments